Latest

How to get the Job in Walk-in Interview in India

Image
Knowledge is Money ஒரு போஸ்டர் ரூ.40000 சம்பளம் பெற்று தந்த சுவாரசியமான நிகழ்வு  Walk-in Interview என்றாலே அனைவருக்கும் பொதுவாக பயமும் படபடப்பும் இருக்கத்தான் செய்யும். ஆனால் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் நிச்சயம் தேர்வு செய்பவர் சிங்கமோ புலியோ அல்ல. அதிகபட்சமாக W e will call you back என்று கூறுவார் அவ்வளவுதான். இதற்கு ஏன் தேவையற்ற பயம். Follow kalavum.blogspot.com நேர்காணலுக்கு செல்லும் முன் உங்களுக்கு இந்த மூன்று மனநிலையில் ஏதேனும் ஒன்று நிச்சயம் இருக்கும். 1. Interview-வில் வென்று விடுவோம் (Confidence ) 2. Interview-ல்  எப்படியாவது வெற்றி பெற வேண்டுமே (Compulsion) 3. நிச்சயம் தோற்க போகிறோம் (Negativity)  வெல்வோம் என்ற மனநிலையில் உள்ளவர்கள் நேர்காணலில் வெற்றிபெற 80% வாய்ப்பு உள்ளது. இரண்டாவது மனநிலை கட்டாயம் வெல்ல வேண்டும் . நமது நாட்டில் பெரும்பாலான மக்களின் மனநிலை இதுவே , இவர்கள் வெற்றி பெற 30% வாய்ப்புகள் மட்டுமே உள்ளது. நேர்காணலைப் பொறுத்தவரை, நிச்சயம் தோற்றுவிடுவோம் என்ற மனநிலையில் இருப்பவர்களுக்கு 100%  சதவீதம் வாய்ப்பு உள்ளது .ஆனால்  அதற்கு சிறு புரிதல் ஏ

Equipments Needed to Start Youtube Channel explained in Tamil

 Youtube Channel தொடங்க தேவையான உபகரணங்கள்

( kalavum.blogspot.com )
  Youtube சேனல் தொடங்க உங்களுக்கு சில விலை உயர்ந்த முக்கிய உபகரணங்கள் தேவைப்படும். அவை DSLR Camera,  High quality mic, Costly Laptop and Professional Editing Software. ஹா ஹா... சும்மா விளையாட்டுக்கு சொன்னேங்க... Youtube channel Start செய்ய மேல சொன்ன எதுவுமே தேவை இல்லை.  முதல் பதிவுல சொன்ன மாதிரி உங்க கைல இருக்க Money Making Machine மட்டும் போதும். என்ன யோசிக்கிறீங்க Money Making Machine-ஐ  மறந்துட்டீங்களா? உங்க Smart phone தாங்க அந்த  Money Making Machine. அதைத் தான் சொல்றேன். Follow our Page👉👉👉👉👉
Equipements needed to to start Youtube channel, Youtube Gadgets, Buy youtube gadget
"Equipements Needed to start Youtube Channel"
   நீங்கள்  இந்த பதிவை படித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்றால், நிச்சயம் உங்களிடம் Smartphone அல்லது Computer  உள்ளது. ஆகவே நீங்கள் Youtube சேனலுக்கு தேவையான அனைத்து Gadget-ஐ யும் பெற்றுள்ளீர்கள். ஒரு ஸ்மார்ட் போன் இருந்தால் போதும் யூடுப் சேனலுக்கு தேவையான A to Z என அனைத்து வேலைகளையும் நம்மால் செய்து முடிக்க முடியும்.

DSLR CAMERA 

   உங்களிடம் ஸ்மார்ட் போன் இருந்தால் அதில் நல்ல quality-யில் வீடியோ எடுக்க குறைந்தது 8 Mega Pixel கேமரா இருக்கும். அதில் settings-ஐ open செய்து அதில் 1280x720 என்று Resolution-set செய்துகொள்ளுங்கள். இப்போது உங்களிடம் அருமையான DSLR கேமரா தயாராகி விட்டது.

High-Quality Microphone 

   அடுத்தது ஒரு சிறந்த  வீடியோவை உருவாக்க  உங்களுக்கு தேவை நல்ல ஆடியோ மைக். உங்களது ஆடியோவை தெளிவாக பதிவு செய்ய உங்களிடம் அதிகபட்சம் Rs.200 மதிப்புள்ள  Earphone இருந்தாலே போதும். பெரும்பாலான யூடுப் வாசிகள் இதுபோன்ற Earphones-யே உபயோக படுத்துகின்றனர்.
Earphones Under Rs.199/- Click here


Tripod / Mobile Holder 

   உங்களது வீடியோக்களை சிறந்த தொழில்முறை கலைஞர் போல் பதிவு செய்ய ஒரு மொபைல் ஹோல்டர் அல்லது Tripod-ஐ பயன்படுத்துங்க. அது உங்களுக்கு வீடியோ ஷே ஆகாம எடுக்க பேருதவியாக இருக்கும். சிறந்த Tripods உங்களுக்கு குறைந்த விலையிலேயே கிடைக்கும். நான் பயன்படுத்தும் Adjustable Tripod விலை Rs.400/- மட்டுமே.
Tripods Under Rs.399/- Click here

Editing Softwares/Apps 

   நாம் சேனல் துவங்க அடுத்து தேவைப்படுவது  Softwares. Android Playstore-ல் நிறைய இலவச video editing softwares உள்ளது. நீங்கள் அதை பயன்படுத்தி நிறைய நல்ல வீடியோக்களை உருவாக்க முடியும். கடந்த மூன்று வருடங்களாக நான் உபயோக படுத்திவரும் software-ரின் பெயர்  Filmora. இதே போல Inshot, Kinemaster போன்ற ஆப்-களையும் Playstore- ல் பதிவிறக்கம் செய்து நீங்கள் பயன்படுத்தலாம். ஒருவேளை உங்களிடம் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் இருந்தால் இன்னும் சிறப்பு, Wonder Share Filmora, Adobe Premier மற்றும் Edius Pro போன்ற மென்பொருட்களையும் பயன்படுத்தலாம்.  ஆக , மேலே சொன்னது போல் யூடுப் சேனல் தொடங்க தேவையான அனைத்தும் நம் கையில் வைத்துள்ள கைபேசியிலேயே உள்ளது. 

   நம் முன்னோர்கள், "கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைந்த கதை" என்று கூறிய பழமொழி போல, கையில் வெண்ணெய் தயாராக உள்ளது, இதை நெய் ஆக்கும் தந்திரத்தை தொடர்ந்து வரும் பதிவுகளில் கூறவுள்ளேன். அதை தெரிந்துகொள்ள kalavum.blogspot.com-Follow பண்ணுங்க.

   இந்த பதிவில் Youtube Channel துவங்க தேவையான முக்கிய உபகரணங்களையும் மென்பொருட்களையும் பார்த்தோம். அடுத்த பதிவில் எப்படி யூடூபில் Account தொடங்குவது என்று பாப்போம். அதற்கு முன் உங்களது சேனலுக்கான பெயரையும் content-ஐயும் முடிவு செய்து கொள்ளுங்கள். பெயரை தேர்வு செய்வதில் சந்தேகம் இருந்தால், How to Choose Channel Name? ClickHere 👈👈👈இந்த பதிவை படிக்கவும். நம் KALAVUM KATRU MARA BLOG குறித்த உங்களது மேலான  கருத்துக்களையும் ஆலோசனைகளையும்  கமென்டில்  பதிவிடவும்.
                                                               நன்றி
Buy Chalkboard Here 
Author  : VIGNES BE.,MBA.,
Blog     : Kalavum Katru Mara 

Comments

  1. உபயோகமான தகவல்கள் தொடர்ந்து பதிவு செய்யுங்கள்

    ReplyDelete
  2. நன்றி சகோ 😊😊💐💐🙏

    ReplyDelete

Post a Comment

Kindly Support Our Blog

Popular Posts

How to Earn Money Online in Lockdown? (Tamil)

How to Earn Money on youtube Step By Step Tamil

How to get the Job in Walk-in Interview in India

How to Prepare for Walk-in Interview in India in Tamil