Latest

How to get the Job in Walk-in Interview in India

Image
Knowledge is Money ஒரு போஸ்டர் ரூ.40000 சம்பளம் பெற்று தந்த சுவாரசியமான நிகழ்வு  Walk-in Interview என்றாலே அனைவருக்கும் பொதுவாக பயமும் படபடப்பும் இருக்கத்தான் செய்யும். ஆனால் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் நிச்சயம் தேர்வு செய்பவர் சிங்கமோ புலியோ அல்ல. அதிகபட்சமாக W e will call you back என்று கூறுவார் அவ்வளவுதான். இதற்கு ஏன் தேவையற்ற பயம். Follow kalavum.blogspot.com நேர்காணலுக்கு செல்லும் முன் உங்களுக்கு இந்த மூன்று மனநிலையில் ஏதேனும் ஒன்று நிச்சயம் இருக்கும். 1. Interview-வில் வென்று விடுவோம் (Confidence ) 2. Interview-ல்  எப்படியாவது வெற்றி பெற வேண்டுமே (Compulsion) 3. நிச்சயம் தோற்க போகிறோம் (Negativity)  வெல்வோம் என்ற மனநிலையில் உள்ளவர்கள் நேர்காணலில் வெற்றிபெற 80% வாய்ப்பு உள்ளது. இரண்டாவது மனநிலை கட்டாயம் வெல்ல வேண்டும் . நமது நாட்டில் பெரும்பாலான மக்களின் மனநிலை இதுவே , இவர்கள் வெற்றி பெற 30% வாய்ப்புகள் மட்டுமே உள்ளது. நேர்காணலைப் பொறுத்தவரை, நிச்சயம் தோற்றுவிடுவோம் என்ற மனநிலையில் இருப்பவர்களுக்கு 100%  சதவீதம் வாய்ப்பு உள்ளது .ஆனால்  அதற்கு சிறு புரிதல் ஏ

How to Prepare for Walk-in Interview in India in Tamil


இந்தியாவில் நடக்கும் நேர்முக தேர்வுகளுக்கு சிறப்பாக தயாராவது எப்படி ?  

(How to Prepare for walk-in Interview)

Job interview preparation

 ( kalavum.blogspot.com )
நேர்காணலுக்கு செல்லும் முன் உங்களது Resume ஐ புதிதாக தயார் செய்ய வேண்டும். ஒருமுறை தயார் செய்த Resume ஐ பல ஆண்டுகளாக பயன் படுத்தும் சிலரை நமக்கு தெரியும் அப்படித்தானே. நீங்கள் அந்த தவறை செய்யாதீர்கள். புதிதாக தயார் செய்யும் Resume, நீங்கள் செல்லும் வேலை சார்ந்த உங்களது தகுதிகளை வெளிப்படுத்த வேண்டும் (பொய்யான தகவல்கள் உங்களை நிச்சயம் வெளியே அனுப்பிவிடும்) . Marketing Executive வேலைக்கு செல்ல நினைத்தால், அது சார்ந்த உங்களது திறமைகளை Resume ல் பதிவிடவும். உதாரணமாக, எனக்கு பயணம் செய்வதில் ஆர்வம் உண்டு, புது மனிதர்களை சந்திப்பது எனக்கு மிகவும் பிடிக்கும் போன்றவற்றை Area of Interest என்கிற பகுதியில் சேர்க்கலாம்.
   Resume தயார் செய்த பின்னர் அதில் உள்ளவற்றை ஒன்றிற்கு இரண்டுமுறை சரிபார்க்கவும். ஏனெனில் நேர்முக தேர்வுகளில் அதிகம் கேட்கப்படும் கேள்விகள் உங்கள் Resume-ல் தான் உள்ளது. உங்களுக்கு தெரியாதவற்றை தயவு செய்து அதில் சேர்க்க வேண்டாம். நீங்கள் ஒரு குறிப்பிட்ட தலைப்பில் Project செய்திருக்கலாம் அதை நீங்கள் Resumeல் பதிவிட்டிருந்தால் அதை பற்றி சரளமாக விவரிக்க தெரிந்திருக்க வேண்டும். அதை பற்றி சரியாக தெரியாவிடில் பதிவிடாமல் இருப்பதே சாலச்சிறந்தது.

   தற்போது நம்மை பற்றிய சரியான தகவல்களை தயார் செய்து விட்டோம். நம் பலம் தெரிந்து விட்டது. அடுத்து நாம் செய்ய வேண்டியது எதிரியின் பலத்தை தெரிந்துகொள்ள வேண்டும். அதை தெரிந்துகொள்வது மிக எளிது Money Making Machine-ஐ பயன்படுத்துங்கள். தற்போது பெட்டிக்கடைக்கு கூட வலைதள பக்கம் (Website) உள்ளது. அடுத்து தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விசயம் , எதிராளியின் எதிரி. ஆமாங்க, நேர்காணலுக்கு செல்லவிருக்கும் நிறுவனத்தின் போட்டியாளர்களை பற்றியும் தெரிந்துகொள்ளுங்கள். இது அந்த நிறுவனத்தின் மீது நீங்கள் வைத்துள்ள ஈடுபாட்டை காண்பிக்கும்.

சுருக்கமாக தெரிந்துகொள்ள வேண்டிய மூன்று விஷயங்கள்.

1. தங்களது Resume ல் இருக்கும் விவரங்கள்
2. நிறுவனம் பற்றிய விவரங்கள்
3. நிறுவனத்தின் போட்டியாளர்கள்

இதை சரியாக செய்துவிட்டால் நேர்காணல் மீதுள்ள பயம் ஓடிவிடும்.

                                                        "How to prepare for walk-in Interview"
   இப்பொழுது நேர்காணலை அணுக தயாராகிவிட்டோம் . அடுத்து நாம் செய்ய வேண்டியது எதையும் மறக்காமல் எடுத்து செல்ல வேண்டும். ஏனெனில் Hallticket ஐ மறந்துவிட்டு பரிட்சைக்கு செல்லும் பலரை நாம் பார்த்துள்ளோம். இதுபோல நடக்காமல் இருக்க நாம் ஒரு checklist தயார் செய்துகொள்ள வேண்டும். அதில் நமக்கு தேவைப்படும் பொருட்கள் அனைத்தையும் குறிப்பெடுத்துக் கொள்ள வேண்டும். பெரும்பாலும் நேர்காணல் பெருநகரங்களில் நடைபெறுவதால் அதற்கு தேவையான மாதிரி Checklist-ஐ தயார் செய்துள்ளேன். அதில் இடம் பெற்றுள்ள முக்கிய விஷயங்களுள் சிலவற்றை கீழே கொடுத்துள்ளேன்.
  • Resume 
  • ATM Card
  • Charger
  • Passport size photos (Minimum-4)... etc.,
முழு checklist-ஐயும் Download செய்து பயன்படுத்தி கொள்ளுங்கள்.
Download Checklist Here 👈👈👈

Checklist for interview
Checklist-ஐ சரிபார்த்த பின்னர் உங்கள் வாகனத்தில் செல்வதென்றால் எரிபொருளை சரிபார்த்து கொள்ளுங்கள் (சக்கரக்த்தில் காற்றையும் சரிபார்த்துக் கொள்ளுங்கள்) இது உங்களது நேரத்தை பெரிதும் மிச்ச படுத்தும். அவசரமாக செல்லும் நேரத்தில் வண்டி பாதி வழியில் நிற்பது மிகவும் கொடுமையான விஷயம். அதற்கு இடம் கொடுக்காதீர்கள். நேர்காணலுக்கு செல்வதற்கும் வாகனத்தை சரி செய்வதற்கும் என்ன சம்பந்தம் என்று பலரும் என்னை திட்டலாம். ஆனால் அதை அனுபவித்தவர்களுக்கு இப்போது சிறிய புன்னகை மலர்ந்திருக்கும்.

   புறத்தோற்றம் குறித்து பேசுகையில்  நிறைய வல்லுநர்கள் Clean Shave செய்ய அறிவுத்துவார்கள். பெரும்பாலான இளைஞர்களுக்கு அதில் உடன்பாடு இல்லை என்பது எனக்கு புரிகிறது. உண்மையில் நீங்கள் உங்களுடைய தாடியை மற்றவர்கள் முகம் சுளிக்காத வகையில் சீராக வளர்பதும் ஏற்றுக்கொள்ள கூடியதே. Clean Shave செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

   ஆள் பாதி ஆடை பாதி என்று சொல்ல கேட்டிருப்பீர்கள் அது 100% உண்மைதான். மிடுக்கான தோற்றம் உங்களுக்கு புதிய உற்சாகத்தையும் தன்னம்பிக்கையையும் கொடுக்கும் அதே நேரத்தில் பார்ப்பவர்கள் மனதில் மரியாதையையும் பிரமிப்பையும் ஏற்படுத்தும். அதில் ஒரு பகுதியாக பாலீஷ் செய்த ஷூ அணிய மறக்காதீர்கள். செருப்பு அணிவதை விட ஷூ உங்களுக்கு கம்பீரமான நடையை கொடுக்கும். Shoe அணிந்து நடக்கும்பொழுது வரும் ஓசை கம்பீரத்தின் வெளிப்பாடாக இருக்கும். நம்பிக்கை இல்லை எனில் ஒருமுறை காலடி சப்தத்தை கவனித்து பாருங்கள். மறுமுறை தானாகவே shoe அணிவீர்கள்.

   அடுத்தது உடை, நேர்காணலுக்கு செல்லும்பொழுது லேசான வண்ணங்கள் உடைய சட்டை (Light Color Plain shirt) அணிவது மிகவும் சிறந்தது. பெண்களும் அவர்கள் விண்ணப்பித்துள்ள நிறுவனத்திற்கு ஏற்ப Light Color சேலை அல்லது சுடிதார் அணிந்து செல்வது சிறந்தது. வெளிர் நிறங்கள் உங்கள் முகத்தில் பொலிவை ஏற்படுத்தும் மேலும் உங்கள் மீது மரியாதை வரவழைக்கும். பெரும்பாலான பிரமுகர்களும் அரசியல் தலைவர்களும் வெள்ளை நிற ஆடை அணிவதன் ரகசியமும் இது தான்.

Buy Sofas Here

   மீண்டும் ஒருமுறை checklistஐ சரிபார்த்துவிட்டு புறப்படுங்கள். அரைமணி நேரத்திற்கு முன்னதாக நேர்முக தேர்வு நடக்கும் இடத்தில் நீங்கள் இருக்க வேண்டும். கடைசி நிமிடத்தில் செல்வது தேவையற்ற பயம் படபடப்பு மற்றும் களைப்பை  உண்டாக்கும். மேலும் அரைமணி நேரத்திற்கு முன்னர் செல்வது அந்த நிறுவனத்தை பற்றியும் அதன் நிறைகுறைகளை பற்றியும் கணிக்க மிகவும் துணை புரியும். அப்படி ஒரு நிறுவனத்தின் வரவேற்பரையில் இருந்த போஸ்டர் எனக்கு 40000 ரூபாய் சம்பளத்துடன் வேலை பெற்று தந்த சுவாரசியமான நிகழ்வு பற்றி அடுத்த பதிவில் பகிர்கிறேன்.

அத்துடன் அடுத்த பதிவில் நேர்காணலின்போது எப்படி நடந்துகொண்டால் வெற்றி பெற முடியும் என்று காண்போம்.

  நன்றி 


Author  : VIGNES BE., MBA.,
Blog     : Kalavum Katru Mara 


நம் KALAVUM KATRU MARA BLOG குறித்த உங்களது மேலான  கருத்துக்களையும் ஆலோசனைகளையும்  கமென்டில்  பதிவிடவும்.
                                                             



Comments

Post a Comment

Kindly Support Our Blog

Popular Posts

How to Earn Money Online in Lockdown? (Tamil)

How to Earn Money on youtube Step By Step Tamil

Equipments Needed to Start Youtube Channel explained in Tamil

How to get the Job in Walk-in Interview in India