Latest

How to get the Job in Walk-in Interview in India

Image
Knowledge is Money ஒரு போஸ்டர் ரூ.40000 சம்பளம் பெற்று தந்த சுவாரசியமான நிகழ்வு  Walk-in Interview என்றாலே அனைவருக்கும் பொதுவாக பயமும் படபடப்பும் இருக்கத்தான் செய்யும். ஆனால் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் நிச்சயம் தேர்வு செய்பவர் சிங்கமோ புலியோ அல்ல. அதிகபட்சமாக W e will call you back என்று கூறுவார் அவ்வளவுதான். இதற்கு ஏன் தேவையற்ற பயம். Follow kalavum.blogspot.com நேர்காணலுக்கு செல்லும் முன் உங்களுக்கு இந்த மூன்று மனநிலையில் ஏதேனும் ஒன்று நிச்சயம் இருக்கும். 1. Interview-வில் வென்று விடுவோம் (Confidence ) 2. Interview-ல்  எப்படியாவது வெற்றி பெற வேண்டுமே (Compulsion) 3. நிச்சயம் தோற்க போகிறோம் (Negativity)  வெல்வோம் என்ற மனநிலையில் உள்ளவர்கள் நேர்காணலில் வெற்றிபெற 80% வாய்ப்பு உள்ளது. இரண்டாவது மனநிலை கட்டாயம் வெல்ல வேண்டும் . நமது நாட்டில் பெரும்பாலான மக்களின் மனநிலை இதுவே , இவர்கள் வெற்றி பெற 30% வாய்ப்புகள் மட்டுமே உள்ளது. நேர்காணலைப் பொறுத்தவரை, நிச்சயம் தோற்றுவிடுவோம் என்ற மனநிலையில் இருப்பவர்களுக்கு 100%  சதவீதம் வாய்ப்பு உள்ளது .ஆனால்  அதற்கு சிறு புரிதல் ஏ

How to Earn Money Online in Lockdown? (Tamil)

ஊரடங்கு நேரத்திலும் பணம் சம்பாதிக்க கற்றுக்கொள்ளுங்கள்

   ஒவ்வொரு நாளும் கடினமாக உழைத்தால்தான் பணம் சம்பாதிக்க  முடியும் என்பது தவறு. ஒரு நாள் உழைப்பில் பல நாள் வருமானம் கிடைக்கும் தந்திரத்தை அனைவரும் கட்டாயம் தெரிந்திருத்தல் அவசியம் . ( kalavum.blogspot.com )
earn money in lockdown, kalavum.blogspot.com ,kalavum katru mara , online jobs tamil

   நாம் தூங்கும்பொழுது கூட நமக்காக பல நபர்கள் உழைத்து , அவர்கள் மூலம் நமக்கு பணம் கிடைக்கிறதென்றால் எப்படி உணருவீர்கள்??? நிச்சயம் இது  சதுரங்க வேட்டை அல்ல.  நிறைய பணம் வைத்திருக்கும் தொழிலதிபர்கள், பல நபர்களை வைத்து அவர்கள் மூலம் பெரும் பணம் ஈட்டுகின்றனர் . முதலாளி தூங்கினாலும் வருமானம் நிச்சயம் உண்டு. ஒரு தொழிலாளி அப்படியல்ல, ஓவ்வொரு நாளும் உழைத்தால்தான் வருமானம். ஒருவேளை அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனால் அவ்வளவுதான், அவரது வருமானம் அன்றே தடைபடும். இதைப்பற்றி விரிவாக பிரபல எழுத்தாளர்  ராபர்ட் கியோஸாகி, பணக்காரத்  தந்தை ஏழைத் தந்தை என்ற புத்தகத்தில்  விளக்கியுள்ளார். இதை நீங்கள் Amazon-ல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

   தற்போது கொரோனாவால் வீட்டில் முடங்கியுள்ளோம், இதேபோல் மழை ,வெள்ளம்,பொருளாதார வீழ்ச்சி ,வேலையின்மை என எது வேண்டுமானாலும் நம்மை முடக்கலாம். இப்படி இருக்கும்பட்சத்தில் நாம் ஒரு தொழிலை மட்டும் நம்பி இருப்பது சரியா?  விலைமதிப்பற்ற பொக்கிசத்தைக் கையில் வைத்துக்கொண்டு பொழுதை வீணடித்துக் கொண்டிருக்கிறோம். ஆம் , உங்களது கைபேசியை பற்றித்தான் சொல்கிறேன். அது கைபேசி அல்ல அஃக்சய பாத்திரம் , அலாவுதீன் விளக்கு என எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். அதன் மூலம் பல ஆயிரங்களையும் சில லட்சங்களையும் நிச்சயம் சம்பாதிக்க முடியும். அதற்கான பல வழிகளில் ஒன்றுதான் YouTube. இது GOOGLE நிறுவனத்தின் ஓர் அங்கம். எனவே இதன் நம்பகத்தன்மை பற்றி சந்தேகம் கொள்ள தேவை இல்லை.  
earn in lockdown tamil , kalavum.blogspot.com , kalavum katru mara
   வீட்டில் இருந்தபடி பணம் சம்பாதிப்பதற்கான சிறந்த வழிகளில் ஒன்று YouTube. உங்களது திறமைகளை உலகிற்கு காட்டுவதன் மூலம் பேரும் புகழும் பெரும் பணமும் சம்பாதிக்கலாம். இங்கு நீங்களே முதலாளி ,உங்களின் நேரம் மட்டுமே முதலீடு, வீட்டில் இருந்தபடியே வேலை. உலகில் விலைமதிக்க முடியாதவைகளுள் ஒன்று நேரம். அந்த நேரம் இப்பொழுது உங்கள் கைகளில். உங்களுக்கு பிடித்ததை செய்ய பணம் கொடுத்தால் கசக்குமா என்ன? கரும்பு தின்ன கூலியா என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது. நிச்சயம் ஆம், உங்களின் திறமை எதுவாயினும் அதை உலகிற்கு காட்டுவதன் மூலம் உங்களுக்கு பணம் கிடைப்பது உறுதி. எந்தமாதிரி திறமைகளை காட்டலாம் என்ற கேள்வி உங்களுக்குள் எழுவதை நான் உணருகிறேன் . 

    உதாரணமாக , உங்களுக்கு பாட தெரியுமா? வாழ்த்துக்கள், உங்களுக்கு YouTube பணம் தர தயாராக உள்ளது. சமைக்க தெரியுமா ? உங்களுக்கும் வாழ்த்துக்கள். நடிக்க தெரியுமா? உங்களுக்கும் தான் . ஓவியம் தீட்டுவீர்களா? நீங்களும் அதிர்ஷ்டசாலியே. நன்றாக பேசுவீர்களா? நீங்களும் சம்பாதிக்கலாம். ஊர் சுற்ற பிடிக்குமா? உங்களுக்கும் பணம் கிடைப்பது உறுதி. இதையெல்லாம் விட உங்களது வீட்டில் செல்ல பிராணி உள்ளதா? உங்களுக்கும் YouTube-ல் சம்பாதிக்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. (தலைப்புகளுள்  ஏதேனும் சந்தேகம் இருந்தால் Comment செய்யவும்) இப்படி நீங்கள் பதிவிடும் வீடியோவிற்கு ஒவ்வொருநாளும் பணம் வந்துகொண்டே இருக்கும் உங்களது வங்கி கணக்கில்.

   மேலே குறிப்பிட்டது போல, நீங்கள்  தூங்கும் பொழுது கூட உங்களுக்காக  பலர் உழைத்து, உங்களுக்கு வருமானம் ஈட்டித்தரும் உன்னத மேடை YouTube. உள்ளூரில் இருந்தபடியே அமெரிக்க டாலரில் (USD $) பணம் சம்பாதிக்கும் அற்புத தளம் இது. இதை நான் மூன்று ஆண்டுகள் பயன்படுத்தி பலன் அடைந்த பின்னரே பதிவிடுகிறேன். எனது  யூடூப் சேனலின் பெயர் களவும் கற்று மற (Kalavum Katru Mara) ஓவியம் மற்றும் பொழுது போக்கிற்கான தளம்

   இதன் மூலம் நான் அடைந்த பலனை நீங்களும்  அடைய வேண்டுமென்றே இதன் வழிமுறைகளையும் , தந்திரங்களையும் ஒவ்வொன்றாக உங்களுடன் அடுத்தடுத்த பதிவுகளில் பகிரவுள்ளேன்.  தொடர்ந்து இணைந்திருங்கள். இந்த ஊரடங்கை சரியாக பயன்படுத்துங்கள். வெற்றி நிச்சயம் அனைவருக்கும் இனிய தமிழ்  புத்தாண்டு வாழ்த்துக்கள்.
தொடர்ந்து படிக்க நமது பக்கத்தை  FOLLOW பண்ணுங்க.

                                                             நன்றி ! 

Author : ஓவிய ஆசிரியர் விசுராம் (Drawing Master Visuraam )
Blog     : Kalavum Katru Mara 







                 

Comments

  1. Ask Your Doubts here... We will clarify

    ReplyDelete
  2. Nice article.,I hope this is very usefull to me.I expect more articles from you...

    ReplyDelete
    Replies
    1. Sure... Tommorow will publish next article in this series... Keep following

      Delete
  3. Wow super and very nice. Make sure to give us more articles.

    ReplyDelete
    Replies
    1. Thank you so much... Tomorrow we will publish the next article

      Delete
    2. Hi sir,eppadi join pandradhunga sir please tell us

      Delete
    3. Hello friend...from tommorow we will upload the entire series... So follow us by clicking web version

      Delete
  4. Replies
    1. yes yes... You can see the prrof by clicking that youtube image

      Delete

Post a Comment

Kindly Support Our Blog

Popular Posts

How to Earn Money on youtube Step By Step Tamil

Equipments Needed to Start Youtube Channel explained in Tamil

How to get the Job in Walk-in Interview in India

How to Prepare for Walk-in Interview in India in Tamil