Latest

How to get the Job in Walk-in Interview in India

Knowledge is Money

ஒரு போஸ்டர் ரூ.40000 சம்பளம் பெற்று தந்த சுவாரசியமான நிகழ்வு 

knowledge is money-kalavum katru mara-how to get job-interview preparation
Walk-in Interview என்றாலே அனைவருக்கும் பொதுவாக பயமும் படபடப்பும் இருக்கத்தான் செய்யும். ஆனால் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் நிச்சயம் தேர்வு செய்பவர் சிங்கமோ புலியோ அல்ல. அதிகபட்சமாக We will call you back என்று கூறுவார் அவ்வளவுதான். இதற்கு ஏன் தேவையற்ற பயம். Follow kalavum.blogspot.com

நேர்காணலுக்கு செல்லும் முன் உங்களுக்கு இந்த மூன்று மனநிலையில் ஏதேனும் ஒன்று நிச்சயம் இருக்கும்.
1. Interview-வில் வென்று விடுவோம் (Confidence )
2. Interview-ல்  எப்படியாவது வெற்றி பெற வேண்டுமே (Compulsion)
3. நிச்சயம் தோற்க போகிறோம் (Negativity)

 வெல்வோம் என்ற மனநிலையில் உள்ளவர்கள் நேர்காணலில் வெற்றிபெற 80% வாய்ப்பு உள்ளது. இரண்டாவது மனநிலை கட்டாயம் வெல்ல வேண்டும் . நமது நாட்டில் பெரும்பாலான மக்களின் மனநிலை இதுவே , இவர்கள் வெற்றி பெற 30% வாய்ப்புகள் மட்டுமே உள்ளது. நேர்காணலைப் பொறுத்தவரை, நிச்சயம் தோற்றுவிடுவோம் என்ற மனநிலையில் இருப்பவர்களுக்கு 100%  சதவீதம் வாய்ப்பு உள்ளது .ஆனால்  அதற்கு சிறு புரிதல் ஏற்பட வேண்டும். அப்படி என்ன புரிதல் என்று நீங்கள் நினைக்கலாம்.

நேர்காணலுக்கு மிக முக்கியமான விஷயம் தைரியம் நிச்சயம் தோற்கப்போகிறோம் என்று தெரிந்த பின்னர் பயப்படுவதில் அர்த்தம் இல்லை. ஜெயிக்க நினைப்பவனுக்கு தோற்று விடுவோமோ? என்ற பயம் இருக்கலாம். ஆனால் தோற்றுவிடுவோம் என்று தெரிந்த பின்னர் துளியும் பயப்பட தேவை இல்லை.  தோற்று விடுவோம் என்ற மனநிலையில் நான் சந்தித்த நேர்காணலின்  சுவாரசியமான  சம்பவத்தை கூறுகிறேன். 

சில வருடங்களுக்கு முன் நான் ஒரு தனியார் நிறுவனத்தில்  நேர்காணலுக்காக அரைமணி நேரம் முன்னரே  சென்றிருந்தேன். அப்போது அங்கு வரவேற்பறையில் சில வாசகங்கள் அடங்கிய படங்கள் இருந்தன அதை கவனித்த வண்ணம் அமர்ந்திருக்கையில் இன்னொரு போட்டியாளர் வந்து அமர்ந்தார். அப்போது அவரிடம் பேச்சு கொடுக்க தொடங்கினேன். அவருக்கு மார்க்கெட்டிங் துறையில் 7 வருடங்கள் அனுபவம் இருப்பதாகவும், தற்போது 15000 சம்பளம் வாங்குவதாகவும், 17000 சம்பளம் கேட்க போவதாகவும் தெரிவித்தார். இந்த இடத்தில் நான் ஒரு முக்கிய விஷயத்தை சொல்லவேண்டும். எனக்கு மார்க்கெட்டிங் துறையில் 2 வருட அனுபவம் மட்டுமே , இருப்பினும் நான் வாங்கிய சம்பளம் ரூபாய் 20000, அதை 30000 ஆகா கேட்க எண்ணி அமர்ந்திருந்தேன்.

இந்த இடத்தில் நீங்கள் இருந்தால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும் என்பதை Comment- இல் பதிவிடவும்.

எனக்கு இரண்டு எண்ணங்கள் தோன்றியது.

  அதில் ஒன்று, அதிக அனுபவம் கொண்ட, குறைந்த சம்பளம் கேட்கும் அந்த நபரை தேர்வு செய்ய போகிறார்கள். மற்றொன்று, 7 வருடங்களாக ரூ.15000 சம்பளம் மட்டுமே பெறுகிறார் இப்போதும் ரூ.2000 அதிகரிக்க 400KM பயணம் செய்து வந்துள்ளார். நிச்சயம் இவர் நமக்கு சரியான போட்டியாளர் அல்ல. அந்த நொடியில் என் மனதில் இருந்த எண்ணம் குறைந்த சம்பளம் கேட்கும் அந்த நபரை தேர்வு செய்தால் இது நமக்கு சரியான நிறுவனம் அல்ல, அதனால் மனதில் பட்டத்தை பேசுவோம் என்ற தைரியம் வந்தது. முதலில் என்னை உள்ளே அழைத்தனர் . எனது Resume ஐ பார்த்துவிட்டு சில சம்பிரதாய கேள்விகளை கேட்ட பின்னர் என் அனுபவம் குறித்தும் நான் செய்து வந்த வேலை குறித்தும் விசாரித்தார்கள். பின்னர் என்ன சம்பளம் எதிர்பார்க்கிறீர்கள் என்றார். நாம் தான் முடிவு செய்துவிட்டோமே பிறகு எதற்கு பயம் என்று நினைத்துக்கொண்டு, நான் தற்போது ரூ.20000 வாங்குகிறேன் ரூ.30000 வேண்டும் என்று கூறினேன். அவ்வளவு அதிக சம்பளம் தர முடியாது 50% Hike is not possible என்று கூறினார். அந்த சமயம், கடந்த வருடத்தில் என் பழைய நிறுவனத்திற்கு நான் ஈட்டி தந்த லாபம் குறித்து கூறினேன். பின்னர் அவர் சற்று யோசித்து விட்டு வரவேற்பறையில் காத்திருக்க சொன்னார்.
பின்னர் , என்னுடன் அமர்ந்திருந்த இன்னொரு போட்டியாளரை அழைத்தார்கள் . அவர் உள்ளே சென்று விட்டு 10 நிமிடங்கள் கழித்து வெளியே வந்தார். எனக்கு அவரிடம் பேச ஆர்வம் அதிகமாகி அருகில் சென்று ," என்ன ஆச்சு ஜி " என்றேன். அவர், திரும்ப அழைப்பதாக கூறினார்கள் என்றார் . அப்போது மேலே கூறிய அந்த 100% வாய்ப்பு என் பக்கம் வருவதை உணர்ந்தேன் . காரணம் என்னை காத்திருக்க சொன்னவர்கள் அவரை அனுப்பி விட்டார்கள். இப்போது அந்த வேலை எனக்குதான் என்ற மனநிலை (Confidence) வந்துவிட்டது. அதே சமயம் திறமைக்கு இந்த நிறுவனத்தில் மதிப்பு உண்டு என்பதும் புரிந்தது.

சில நிமிடங்களில் என்னை தேர்வு செய்தவர் , Marketing Head ஐ காண அழைத்து சென்றார். அவரது அறையில் நுழைந்தவுடன் அங்கு இருந்த வாசகங்கள் அடங்கிய படங்களை பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் ஒரு வாசகம் என்னை மிகவும் கவர்ந்தது "Knowledge is Money". ஆனால் இதை "Knowledge is Power" என்று தான் படித்துள்ளேன். அந்த வித்தியாசம், மார்க்கெட்டிங் தலைவர்  பற்றியும் அந்த நிறுவனம் பற்றியும் மேலும் ஒரு தகவலை அளித்தது. அதுவே பணம். அனைத்து வியாபாரிகளும் பணத்தை விரும்புவர். ஆனால் இவர்கள் அதை வெளிப்படையாக கூறுவது புரிந்தது.அதில் தவறொன்றும் இல்லை. நானும் மனதில் பட்டதை வெளிப்படையாக கூறலாம் என்று தான் முடிவு செய்திருந்தேன் .

முந்தைய பதிவில் கூறியது போல எனக்கு ரூ.40000 சம்பளம் பெற்றுத்தந்த போஸ்டரும் அதுதான் "Knowledge is money" 

என்னை முதல் சுற்றில் தேர்வு செய்தவர் என் பக்கத்தில் அமர, Marketing Head என் Resumeஐ பார்த்துக் கொண்டிருந்தார்.

பொதுவாக நான் Resume இல் Strength என்ற பகுதியில் PAINS என்று குறிப்பிடுவது வழக்கம். இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, அவர்கள் கவனம் மற்ற கேள்விகளை விடுத்து PAINS என்ற வார்த்தைக்குள் செல்லும். அது குறித்து கண்டிப்பாக  விளக்கம் கேட்பார்கள். இது அவர் கேட்க நினைக்கும் வேறு சில கேள்விகளை தள்ளிவைக்கும். தெரியாத கேள்விக்கு பதில் யோசிப்பதை விட,  பதில் தெரிந்த கேள்விகளை கேட்க தூண்டுவது சிறப்பு என்று நான் நம்புகிறேன். மற்றொன்று, நாம் அளிக்கும் பதில் நம்மை மற்றவர்களிடம் இருந்து வித்தியாசப்படுத்தி காண்பிக்குமாறு தயார் செய்து வைத்துள்ளோம்.
PAINS-Knowledge is money-kalavum katru mara-resume
(இது நான் அந்த நிறுவனத்திற்கு கொடுத்த Resume-ன் படம் )

PAINS என்பதன் விளக்கம் Positive Attitude In Negative Situation. 

இதை கூறிய அடுத்தநொடி நிச்சயம் இதற்கு உதாரணம் கேட்பார்கள். உங்கள் துறை சார்ந்து ஒரு கதையை தயார் செய்து கொள்வது மிக முக்கியம். நான் நினைத்தது போலவே அவரும் கேட்டார்.
      இங்கு நான் கூறியது அங்கு சற்றுமுன் நடந்த கதையை தான். "என்னுடன் வந்த போட்டியாளர் என்னை விட அதிக அனுபவம் பெற்றவர் என்றும், குறைந்த சம்பளமே எதிர் பார்ப்பதாகவும் கூறினார். அது உண்மையில் எனக்கு Negative situation தான். அந்த நொடி எனக்கு வந்த Positive Attitude அவர் பல ஆண்டுகளாக குறைந்த சம்பளம் மட்டுமே எதிர்பார்க்கிறார் என்றால் அவர் எனக்கு நிகரான போட்டி அல்ல என்று நான் எனக்குள் தயாரானதுதான்" என்று வெளிப்படையாக கூறினேன்.

உடனே, முதல் சுற்றில் என்னை தேர்வு செய்தவர், "சம்பளம் குறித்து சகபோட்டியாளரிடம் பேசுவது தவறு இல்லையா?" என்றார்.

"நான் விண்ணப்பித்த வேலை மார்க்கெட்டிங் பிரதிநிதி , இந்த துறையில் முக்கிய விஷயம் போட்டி நிறுவனங்களை ஆராய்வதும் அதன் நிறைகுறைகளை தெரிந்துகொள்வதும் தான். எனில், இங்கு என் போட்டியாளரை பற்றி தெரிந்துகொண்டதன் மூலம்  என் வேலையை நான் சரியாக செய்துளேன்" என்றேன். இதை கவனித்துக்கொண்டிருந்த Marketing Head புன்னகைத்தார்.

புன்னகையுடன் மார்க்கெட்டிங் தலைவர் I am Impressed என்று கூறினார். அந்த சமயம் நான் மிக அருமையாக உணர்ந்தேன் . அடுத்த நொடி அவர், நீங்கள் உங்களது சிறு நகரத்தில் வேலை செய்வதற்கு பதிலாக சென்னை, பெங்களூரு போன்ற பெரு நகரத்திற்கு வரலாமே என்றார். அவர் கூறியது எனக்கு "Powerful People Comes From Powerful places" என்ற K.G.F வசனத்தை நினைவூட்டியது. இருப்பினும்  அடுத்து நான் பேசியது சற்று அதிகமாக தெரியலாம். ஆனால் வேண்டியது கிடைக்க, பேசுவதில் தவறில்லை. "அழுத பிள்ளை மட்டுமே பால் குடிக்கும்" என்ற பழமொழி உங்களுக்கு தெரியும் அல்லவா. உடனே நான் எனக்கு சம்மதம். ஆனால், நான் கேட்ட சம்பளம் எனது சிறுநகரத்தில் பணிபுரியவே. பெருநகரத்தின் "Cost of Living"ற்கு ரூ.30,000 போதாது என்றேன்.

அவர் சற்று உற்று நோக்கியவாறு நீங்க பணத்தின் மீது அதிக கவனம் செலுத்துகிறீர்கள் என்றார்.

உடனே நான், அவர் தலைக்கு பின்னால் இருந்த "Knowledge is Money" என்ற வாசகத்தை சுட்டிக்காட்டி, புன்னகைத்தவாறு அனைவரும் அதைத்தானே எதிர்பார்க்கிறோம் என்றேன். பின்னர், அவரும் சிரித்துவிட்டு சரி பெங்களூரில் பணிபுரிய எவ்வளவு வேண்டும் என்றார். நான் ரூ.40000 என்றேன். அவர் அதிகம் பேசவில்லை ரூ.40000 சம்பளத்திற்கான சரியான ஒரு காரணம் சொல்லுங்கள் நீங்கள் கேட்ட சம்பளத்துடன் Appointment Order தருகிறேன் என்றார். உடனே நான் புன்னகையோடு, என்னையே என்னால் சரியான விலையில் உங்களிடம் விற்கமுடியாவிடில், உங்களது நிறுவனத்தின் பொருட்களை எப்படி நல்ல  விலையில் விற்க முடியும் என்று கேட்டேன். அவ்வளவுதான் மறுபடியும் அவர் I am Impressed with your Attitude என்று கூறினார். வேறென்ன மறுநாள் Email-ல் appointment order வந்தது. 50% Hike தர மறுத்த இடத்தில் வெளிப்படையாகவும் தைரியமாகவும் பேசியதால் 100% Hike கிடைத்தது. இது என் வாழ்நாளில் மறக்கமுடியாத மற்றும் புத்துணர்வு அளித்த சம்பவம்.

இந்த பதிவில் நீங்கள் நினைவில் வைக்க வேண்டிய பத்து விஷயங்கள்.

1.நேர்காணலுக்கு குறித்த நேரத்திற்கு முன் செல்ல வேண்டும்.

2.சுற்றுசூழலை நன்கு ஆராயவேண்டும், அதே நேரத்தில் நாம் கவனிக்கபடுகிறோம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

3.அங்கு நடக்கும் நிகழ்வுகளை நமக்கு சாதகமாக பயன்படுத்த எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.

4.பயம் துளியும் இருக்க கூடாது. அதேநேரத்தில் நாம் கொடுக்கும் மரியாதையில் குறைவும் இருக்க கூடாது.

5.வேண்டியதை தெளிவாகவும் தயக்கமின்றியும் கேளுங்கள். நம் தேவைக்காகதான் வேலை செய்கிறோம், நம் தேவைகள்  பூர்த்தியாகாமல் வேலை செய்வதில் பயன் இல்லை.

6.அவர் என்ன கேள்வி கேட்க வேண்டும் என்பதை நீங்கள் தீர்மானித்து அதை நோக்கி அவர் கவனத்தை செலுத்த வையுங்கள் நான் PAINS என்ற வார்த்தையை பயன்படுத்தியது போல.

7.முழு விழிப்புடன் இருங்கள். எந்த ஒரு சிறிய செயலும் நமக்கு சாதகமாகவும் பாதகமாகவும் மாற 100% வாய்ப்பு உண்டு.

8.இந்த வேலை கிடைத்தால் தான் வாழவே முடியும் என்ற மனநிலையில் செல்லாதீர்கள். அது உங்கள் திறமைகளையும் சுயமரியாதையையும் சரிவை நோக்கி இழுத்து செல்லும்.

9.நீங்கள் நினைத்தது கிடைக்காவிட்டால் ஒருபோதும் உங்களை சமாதானம் செய்துகொள்ளாதீர்கள். நமக்கு எது வேண்டும் எது வேண்டாம் என்பதை  நாம் தான் தீர்மானிக்க வேண்டும்.

10. உண்மையில் அந்த நிறுவனம் உங்களுக்கு ஏற்புடையதா என்று நன்கு தீர்மானித்து விட்டு சேருங்கள். வேலைக்காக உங்களது உண்மையான பண்பை மறைத்து நடிக்க வேண்டாம். ஒரு நாள் நடித்தால், பணிபுரியும் ஒவ்வொரு நாளும் நடிக்க வேண்டும். அது மிகவும் சிக்கலாகிவிடும்.
Bonus Tips 
   ஆங்கிலம் பேசுவதில் சிரமம் என்று நீங்கள் நினைத்தால், அவர் முதல் கேள்வி ஆங்கிலத்தில் கேட்கும் பொழுதே அதற்கான பதிலை தமிழில் கூறுங்கள். நிச்சயம் அடுத்த கேள்வி தமிழில் தான் கேட்பார். இது ஒரு குட்டி சைக்காலஜி, முயற்சி செய்து பாருங்கள். தொடக்கத்தில் ஆங்கிலத்தில் பேசி ஏதோவொரு கட்டத்தில் திணறிவிட்டு பின்னர் தமிழில் பேசுவதை விட இது சிறந்தது.
  நன்றி 


Author  : VIGNES BE., MBA.,
Blog     : Kalavum Katru Mara 


நம் KALAVUM KATRU MARA BLOG குறித்த உங்களது மேலான  கருத்துக்களையும் ஆலோசனைகளையும்  கமென்டில்  பதிவிடவும்.
                           
Previous Post: How to Prepare for an interview with the checklist                                







Comments

Popular Posts

How to Earn Money Online in Lockdown? (Tamil)

How to Earn Money on youtube Step By Step Tamil

Equipments Needed to Start Youtube Channel explained in Tamil

How to Prepare for Walk-in Interview in India in Tamil